Saturday, 28 January 2012

வரதட்சணை வன்கொடுமைக்கு யார் காரணம்?



வரதட்சணை ஒரு வன் கொடுமை என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.(பணத்திமிர், பேராசை கொண்டவர்களைத் தவிர). இந்த வரதட்சணை எனும் கொடுமையின் காரணமாக, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், பெண்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டும், பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சட்டம் புத்தக கட்டுக்களிலும், ஆள்வோர் மற்றும் பணத்திமிர் கொண்டோரின் சட்டைப்பையில் படுத்து தூங்குகிறது.
இந்த அவலம் எல்லா மத மக்களிடமும், சாதிகளிலும் புரையோடி,இன்று வரதட்சணை கொடுப்பது ஒரு பேஷன் போன்று ஆகிவிட்டது. இந்த அவலங்களுக்கெல்லாம் யார் காரணம்? இந்த வரதட்சணையால் வரும் கேடு என்ன? அதற்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்கிறது? என இன்ஷா அல்லாஹ் அலசுவோம்.

இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?

 ஜமாஅத்துக்கு கமிஷன்?

ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை 'கரை' ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?
அறியாமைக் கால அரேபியர் பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.

இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் "வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, ஜமாஅத்துக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.
"அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)
இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.

 குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி!

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.(4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். 'மஹர் வழங்கி மண முடியுங்கள்" என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! இந்த அயோக்கியர்கள்.

அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)
அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)
மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி? தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு அறிவிலி தொடங்கி வைத்த இந்த தீமை இப்போது காட்டுத்தீயாக பரவி பெரும் நாசம் விளைவித்து வருகின்றது.

"ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி" இது முதுமொழி. இப்போது "ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி" இது புதுமொழி.

இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன - மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.
இறைவன் தன் திருமறையில் "விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.

 சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை!!

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)
ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.

வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.

தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.

பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.
இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.

Saturday, 21 January 2012

காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்


மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள்.  இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.
தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம்.
தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.
பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார் கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து  கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு தெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் நடந்தேறுகிறது.
தற்போதைய தகவற் தொழிநுட்ப யுகத்தில் இன்றைய காதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில் இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.
இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்து நடப்பவை அல்ல. மாறாக உணர்வுகளின் உந்துதல்களால் நடைபெறுபவை ஆகும். இவ்வாறு நடந்தேறிய திருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள் சந்தோஷமாக கழிகின்றன‌. பின்னர் கோலங்கள் கலைந்து வாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்கு முகம் கொடுக்க முடிவதில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்கின்ற தன்மைகள் அஸ்த்தமித்து அற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.
உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய் மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள் அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளே பூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இது விவாகரத்தில் சென்று முடிகின்றது.
அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும் உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவு இடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக் குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள்  தற்போதைய காதல் திருமணங்களேயாகும்.
மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்று தற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின் அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம்  என்பன இருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள் போலித்தனமானவையாகும்.
இன்றைய காதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில்  காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் மலையின் மீதிருந்து கீழே  குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டேயிருப்பார்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரி 5778
இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்து எம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நிய ஆண்களும்  பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
‘உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;)  அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;  தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘.  (அல்குர்ஆன் 4:25)
மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது.
திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.
மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும்  விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.
‘நான் நபி (ஸல்) அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான் அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா?  எனக் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார். அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றது என்றார்கள் ‘.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்
‘நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழி) நூல்: திர்மிதீ நஸயீ
மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.
‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970
அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.
இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்
மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள்  முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.
ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;  இணை வைக்கும் ஒரு பெண்  உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;  இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)
அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும் போது அதனைத் தடுப்பது குற்றமாகும்.
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக

எஸ்.எல்.எம். – காத்தான்குடி readislam.net

Saturday, 24 September 2011

தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி, தொடர்ந்து நன்மை கிடைக்கும் விதமாக செய்த நிலையான நல்லறம், தனக்குப் பின்னர் (பிறரால்) செயல்படுத்தப்படும் கல்வி ஆகிய மூன்று காரியங்கள் மனிதன் விட்டுச் செல்பவற்றிலேயே மிகவும் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இப்னு ஹிப்பான் நூலிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

இப்னுமாஜா பக்கம் – 25,ஹதீஸ் எண்: 241

Wednesday, 17 August 2011

மாவீரன் திப்பு சுல்தான்

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்:

" நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார்.
வருவாய் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்."
மாவீரன் திப்பு சுல்தான் பற்றி அல்லாமா இக்பால்:

ஏ! காவிரியே! கம்பீரமகாத் தலைநிமிர்ந்து நீ வீரநடைப் போடுகிறாயே!

நீ சுமந்து செல்லும் செய்தி என்னவென்று உனக்கு நினைவுள்ளதா?
...
நீ எந்த மாவீரனை சுற்றி நாள் தவறாமல் வலம் வந்து கொண்டிருந்தாயோ - அந்த

மாவீரனின் குருதி உனது அலைகளில் கொப்பளிக்கிறதே!

அது தான் அந்த செய்தி!

அன்று, கிழக்கு தூங்கிக் கொண்டிருந்தப் போது,

அவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்.

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி ஆங்கில கனோனால் மேடோஸ் டைலர்:

"திப்பு சுல்தான் கௌரவமான பெரிய மனிதர். அவரைப் போன்ற உயர்ந்தக் கொள்கையுடைய மனிதரை இந்தியா இனிமேல் எப்போதும் பார்க்காது. வியக்கத்தக்க திறமையும் ஊக்கமும் கொண்டு, மக்களைக் கவர்ந்து எல்லோரிடமும் அன்போடும் கருணையோடும் நடந்துக் கொண்டார். மாசா அல்லாஹ்! திப்பு சுல்தான் கண்ணியம் மிகுந்த தலைவன்!"
மாவீரன் திப்பு சுல்தான் பற்றி ஆங்கில ஜெனரல். மேஜர் டிரோம்:

திப்பு சுல்தானின் ஆட்சி தன்னிச்சையானதும், கண்டிப்பனதுமானாலும், குடிமக்களைப் பாதுகாத்து , உதவிகள் செய்து அவர்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டு நடத்தும் செங்கோலாட்சியே அல்லாமல் துன்புறுத்தும் கொடுங்கோல் ஆட்சியல்ல! திப்பு சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மக்கள் தாரளமாக பெற்று மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்ந்தார்கள் என கூறியுள்ளார்.
தமிழ் கலைக் களஞ்சியத்தில் திப்பு சுல்தான்:

" திப்பு தூயவர். ஒழுக்கம், சமயப் பற்று, அறிவு , அரசியல் திறன் உடையவர். உருது, அரபி, கன்னடம், பாரசீக மொழிகளைப் பேசக்கூடியவர். சிறந்த நிர்வாகி. சிறந்த நூல் நிலையம் வைத்து இருந்தார். புதிய நாணயங்களை வெளியிட்டார். வேளாண்மையைப் பெருக்கினார். மதுவிலக்கை அமல்படுத்தினார். சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய கடிதங்கள் அவர் இந்து மதத்தின் இனிய நண்பர் என்பதை விளக்குன்கின்றன".

மஞ்சை வசந்தன் எழுதிய மாவீரன் திப்பு சுல்தான் வரலாற்று நூல் முழுவதுமாக படிக்க 


thanks : rajakiri kazzali 

Friday, 5 August 2011

எல்லாப் பெண்களும் மகாராணிகளே!


அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?

[ ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?''

முஸ்லிம் கேட்டார்; 'உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''
 

அவசர அவசரமாக றுத்தார் அந்த ஆங்கிலேயர்; ''அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே....!''

முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.' 

எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.'']

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது கிறந்ததாகும்.'' (நூல்:- தபரானி)

மேற்கூறப்பட்ட நபி மொழியை உற்றுநோக்கும்போது முஸ்லிம் சமூகத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர் மார்க்கக் கட்டளையை புறக்கணித்து விட்டு மேல்நாட்டு கலாசாரங்களை பின்பற்றுகின்றனர்.

சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன்மகள், சகோரனின் மனைவி, சாச்சி, மாமி, போன்றோருடன் கைக்குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நாம் தவிர்ந்துகொள்வது நன்று. இது கையின் விபசாரங்களில் ஒன்றாகும்.


பின்வரும் ஹதிஸ்களை சற்று கவனித்தல் நன்று.

''இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. இரு கைகளும் விபசாரம் செய்கின்றன. இரு கால்களும் விபசாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபசாரம் செய்கிறது.'' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்: ''நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாபஹா செய்ய கைகுலுக்க மாட்டேன்.'' (அறிவிப்பாளர்: உமைமா பிர்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: இப்னுமாஜா)

மேலும்: ''நிச்சயமாக நான் பெண்களின் கைகளைத் தொடமாட்டேன்.'' (நூல்: தபரானி)

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட பொன்மொழிகள் "நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிடுவேன் என மிரட்டும் கணவன்மார்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.

ஒரு ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அந்நிய ஆணுடனோ முஸபாஹாச் செய்வது ஹராமாகும். அது கை உறை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாபஹாச் செய்தாலும் சரியே!

ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி அதை தடுக்கின்றீர்கள்?''


முஸ்லிம் கேட்டார்; 'உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''


அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்; ''அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே....!''



முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.


எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.''


கேள்விகேட்ட ஆங்கிலேயர்; அந்த முஸ்லிமின் பதிலைக்கேட்டு விக்கித்துப் போனார் என்று சொல்லவும் வேண்டுமோ!


Regards,
Reeshma Yaser...


source : kuwait tamil islamic committee

Wednesday, 3 August 2011

உறுதி ஏற்போம்!


நோன்பின் பிரதிபலனை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு, நோன்பு நோற்றவரிடம் காணப்பட வேண்டிய மாற்றம்தான் என்ன? நோன்பு முடிந்து, தொடரும் அடுத்த 11 மாதங்களில் நோன்புக் காலங்களில் உரிய காலத்தில் நிறைவேற்றிய தொழுகைகள், கடைப்பிடித்த ஒழுக்கங்கள், நற்பண்புகள், இன்னபிற நற்செயல்களை விட்டு விலகி வாழ்வதா? அல்லது நோன்புக் காலங்களில் தன்னைக் கண்காணித்த அதே இறைவன்தான் இப்போதும்-எப்போதும் தன்னைக் கண்காணிக்கின்றான் என்ற உணர்வுடன் அந்நற்பண்புகளை விட்டு விலகாது தொடர்ந்து அவற்றை மேம்படுத்துவதா? என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாதத்தில் பழகிப் பக்குவப் பட்ட ஒழுக்க வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு, "பழைய குருடி ..." உவமையாக வாழத் தலைப் பட்டவர்களுக்கு,
"அந்நாளில் அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும் அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததைப் பற்றி சாட்சியம் கூறும்"".  (அல்குர்ஆன் : 24:24);

"அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும் கண்களும் அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்". (அல்குர்ஆன் : 41:20).

நாளை மறுமையில் தமது சொல், செயல், செவி, பார்வைகள் அனைத்தும், கேள்விக்கு உட்படுத்தப்படும் என்பதை மறந்து ரமளானைத் தொடர்ந்து வரும் அடுத்த 11 மாதங்களில் குர்ஆன் போதனைகள் மற்றும் நபிவழிக்கு மாற்றமாகத் தமது வாழ்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு மேற்கண்ட இரு வசனங்களும் எச்சரிக்கை விடுக்கின்றன. அடுத்த ரமளானில் இக்காலகட்டத்தில் செய்பவற்றுக்குப்  பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என இறுமாந்து இருப்பவர்கள், அடுத்த ரமளான் வருவதற்குள் இலட்சியமற்ற அலட்சிய வாழ்க்கை வாழும் நிலையில் மரணித்தால் தன் நிலை என்னவாகும் என்று சற்றும் கவலையற்றவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் அருள் புரிந்து பாதுகாப்பானாக.

இனிமேலாவது இந்நிலையிலிருந்து தான் மாற வேண்டும் என்று ஒவ்வொருவரும் தன் மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டு இந்த புனித ரமளான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். உலகில் புத்தாண்டு தீர்மானங்கள், பழைய ஆண்டு தீர்மானங்கள் எனப் பல தீர்மானங்கள் (resolutions) நிறைவேற்றப் படுவதைப்போல் இப்புனித ரமளானின் ஆரம்பத்திலும் நம் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மையடைய சில தீர்மானங்களை ஒவ்வொருவரும் மனதில் எடுக்கலாம்.

இன்ஷா அல்லாஹ்!
  • இந்த ரமளான் முதல் நான் தினம் ஐந்து வேளை தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழுவது முதல், வாழ்வின் எல்லா காலகட்டத்திலும் எனது செயல்கள் எல்லாவற்றிலும் முறையாக குர்ஆன்-நபிவழியில் வாழ்ந்து வருவேன்.
  • எல்லாவித தவறுகளில் இருந்தும் விடுபட்டு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து இம்மை மறுமை வெற்றிக்கு உழைப்பேன்; அதற்காக அல்லாஹ்விடம் பிராத்திப்பேன்.
  • அதிகமதிகமாக நன்மைகளை, தர்மங்களைச் செய்வேன்.
  • மார்க்கப் பணிகளில் எனது உபரி நேரத்தைச் செலவழிப்பேன்.
  • அல்லாஹ்விடம் அதிகமாகப் பாவமன்னிப்புத் தேடுவேன்.
  • தீய பழக்கங்கள் / தீய காரியங்களில் ஈடுபடமாட்டேன்.
  • இறைச் சிந்தனையுடன், எப்போதும் இறையச்சத்துடன் வாழ்வேன்.
  • குர்ஆனைப் பொருள் உணர்ந்து படிப்பேன், அதை எனது வாழ்க்கையில் செயல் படுத்துவேன்.
  • செய்யும் எந்த நற்செயலையும் தொடர்ந்து இடைவிடாமல் செய்ய முயல்வேன்.
போன்ற பல தீர்மானங்களை மனதில் நிறைவேற்றி உறுதியான ஈமானுடனும் இறை நம்பிக்கையுடனும் வாழ்ந்து மரணிக்க சங்கல்பம் செய்து கொண்டு இப்புனித ரமளானை ஆரம்பிக்க வேண்டும். இதுவே நிரந்தரமான, முறையான பயனாக அமையும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்; பிறருக்கும் இதை உணர்த்தும் வகையில் தன் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுத்தி முன்னுதாரணமாகத் திகழ இயன்றவரை முயல வேண்டும். இத்திட சங்கற்பத்தை மனதில் ஏந்தியவர்களாக இவ்வரிய புனித ரமளானை நாம் ஆரம்பிப்போம்.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்,satyamargam

Sunday, 31 July 2011

நார்வே தாக்குதல் – ஊடக அதர்மம்




கடந்த மாதத்தில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதும் நார்வேயில் Anders Behring Breivik எனும் தனிநபரின் பயங்கரவாதத் தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. ஆனால் இரண்டு தாக்குதல்களும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமும் அதை ஊடகங்கள் காட்சிப்படுத்திய விதமும், கொடுத்த முக்கியத்துவமும் ஊடக தர்மத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதோடு கவலைக்குரிய பல விஷயங்களை நம்முன் எழுப்பியுள்ளன.
 
எப்படி குண்டு வெடிப்பதற்கு முன்பே அதை வைத்தவர்களின் பெயர்களை வெளியிடும் அளவுக்கு இந்தியாவின் ஊடகங்கள் புலனாய்வுப் பத்திரிகைகளின் சூப்பர் பவராக விளங்குகின்றதோ அதுபோல் நார்வே தாக்குதலில் Anders தன் நாசத்தைத் தொடங்கி, அதை முடிக்கும் முன்னரே "இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் முஸ்லிம்கள்" எனும் பொருளில் உலக ஊடகங்கள் தங்கள் கற்பனையைச் செய்தியாய் உமிழ்ந்தது கவலைக்குரியது. நார்வேயில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைக் குறித்து ஊடகங்களின் பார்வையை வரலாற்று நிபுணரான ஷிவா பலாஹி தன்னுடைய இணைய தளத்தில் இவ்வாறு எழுதுகிறார் “Tragic Day for Norway, Shameful Day for Jounalism” (நார்வேக்கு நாச தினம்; ஊடகத்துக்கு அவமான தினம்). அவரின் கூற்று உண்மை என்பதைத்தான் நாம் தினந்தோறும் பார்க்கும் காட்சிகள் உண்மைப்படுத்துகின்றன.

இந்த நாசகார செயலை செய்தவன் முஸ்லிமில்லை; மாறாக, அவன் முஸ்லிம் விரோதப் போக்கைக் கொண்டவன் என்பது தெரியவந்தபோது ஊடகங்கள் தங்கள் சுருதியை மாற்றிக் கொண்டன. அவ்வாறு மாற்றியபோது அதற்கு எம்மதச் சாயமும் பூசப்படவில்லை என்பது மாத்திரமல்ல இக்கொடுஞ் செயலைச் செய்வதற்குக் கொலைகாரனின் பக்கமிருந்த நியாமும் ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டது. பிரிட்டனின் மிகப் பிரபலப் பத்திரிகையான The Sun தன் தலையங்கத்தில் “நார்வேயின் 9/11 – அல்காயிதாவின் நாசவேலை” என்று எழுதித் தன் முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்திக் கொண்டது. அப்படுகொலைகளைச் செய்தவனின் உண்மை விபரங்கள் வெளிவந்த பிறகும் “ஒருவேளை அல்காயிதாவால் உருவாக்கப்பட்ட உள்நாட்டுத் தீவிரவாதியாக இருக்கலாம்” என்று தன் பொய்யை உண்மைப்படுத்த முனைந்தது சன் இதழ்.

“குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவன் குற்றமற்றவனே” என்பது எல்லாக் காலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொது நியதி என்றாலும் முஸ்லிம்களின் விஷயத்தைப் பொருத்தவரை அது தலைகீழாக வெகுகாலம் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆம் “குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும்வரை முஸ்லிம் என்பவன் குற்றவாளியே” என்று குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு முஸ்லிமின் மேல் சுமத்தப்பட்டுள்ளது. ஊடகங்கள் கடந்த காலத்தில் சில நிகழ்வுகளின் அடிப்படையில் முந்திக் கொண்டு செய்தியை வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் குண்டு வெடித்தவுடன் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட செய்திகளை வெளியிட்டு தங்கள் பாப்புலாரிட்டியை தக்க வைத்து கொள்கின்றன.

“எப்போதும் மனிதனுக்கு இனம் தெரியா எதிரியின் மேல் ஒருவகை அச்சம் இருக்கும். அவ்வச்சத்தை ஊதிப் பெரிதாக்கி விற்பனையை அதிகரிப்பதே பத்திரிகைகளின் வேலை. இப்போது ஊடகங்களுக்குத் தம் வாசகனிடத்தில் விற்பதற்கு மிகச் சிறந்த அச்சமூட்டும் எதிரியாக இஸ்லாம் ஆகிப்போயிருக்கிறது” என்று ஒரு மனோதத்துவ நிபுணர் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு சில ஊடகங்கள் நேர்மையாய் நடந்தாலும் பெரும்பாலான மேற்குலக ஊடகங்கள் “இஸ்லாமோஃபோபியா”வால் பாதிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. சில ஊடகங்கள், "தாக்குதல் நடத்தியவன் இஸ்லாத்துக்கு மதம் மாறியவனாக இருக்கலாம்" என்றும் ஆரூடக் கருத்திட்டன. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தில் தற்போது பணிபுரியும் அமெரிக்க அரசின் தீவிரவாத ஒழிப்பின் சிறப்பு ஆலோசகர் வில் மெக்கண்ட்ஸ் இச்சம்பவம் நடைபெற்றவுடன் இது உடனடியாக ஒரு இஸ்லாமிய தளத்தில் வெளியிடப்பட்டதைச் சுட்டிக் காட்டி,"இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்" என்று சொன்னதை அமெரிக்காவின் மிகப் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. இதனால் நமக்குப் புலப்படும் யதார்த்தம் என்னவென்றால் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு ஆலோசகர்களின் இலட்சணமும் இஸ்லாத்தைப் பற்றிய அவர்களது மிரட்சியும்தான்.

இந்திய ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மேற்குலகின் ஊடகத்துக்குச் சற்றும் சளைக்காமல் எதையும் ஆராயாமல் மனதில் பட்டதை அப்படியே பரபரப்புக்காக எழுதும் ஊடகங்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும்; நிதானிக்க வேண்டும். தாங்கள் எழுதும் ஒரு சில வரிகள் ஒரு சமூகத்தின் மீதான தாக்குதலுக்கு வழிகோலிடும், மிகப் பெரும் கலவரத்துக்கு வழி வகுக்கும் என்பதை உணர வேண்டும். ஊடகங்கள் இனிமேலாவது தங்கள் பொறுப்பை  உணர வேண்டும்

சத்தியத்தைச் சார்ந்து இயங்கும் அதிகாரிகளும் ஊடகங்களும் இல்லாமலில்லை. ஆனால் சொற்பம். ஹேமந்த் கார்கேரே போன்று ஒரு நேர்மையான இந்திய அதிகாரி இல்லாவிட்டால் நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவித் தீவிரவாதம் என்பதே வெளியே தெரியாமல் போயிருக்கும். டெஹல்கா போன்ற நடுநிலை ஊடகங்கள் இல்லாவிட்டால் உண்மையான கோத்ரா நிகழ்வும் தொடர்ந்து குஜராத்தில் அதன் முதலமைச்சரே தலைமையேற்று நடத்திய கோரத் தாண்டவமும் 'இருதரப்பினர் மோதல்' எனும் பிசுபிசுப்பான பூஞ்சைச் செய்தியாகி இருக்கும்.

ஏதோ தீவிரவாதம் என்றாலே ஒரு குறிப்பட்ட சமூகமே குத்தகைக்கு எடுத்துள்ளது போன்ற எண்ணங்களை ஊடகங்கள் கைவிட்டு தங்கள் பொறுப்பை உணர்ந்து யூகங்களையும், சந்தேகங்களையும் தவிர்த்து விசாரணையின் கோணம் மாறாமல் செய்திகளை வெளியிட முன்வரவேண்டும்.

நச்சுகள் எங்கு இருந்தாலும் அவை அழிக்கப்பட வேண்டியவையே - எந்த மதச் சாயத்தைப் பூசிக் கொண்டிருப்பினும்.

Saturday, 30 July 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

 இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.


source : inneram.com

Thursday, 21 July 2011

Six things that cause someone to go astray

Allaah, the mighty and majestic created mankind upon al-Fitrah (the natural inclination):
…Allaah’s fitrah (i.e. Allaah’s Islaamic Monotheism), with which He has created mankind. [Sooratur-Room, 30:30]





“Part of al-Fitrah is loving the truth and detesting falsehood because the truth is sweet, it is delicious to the hearts and falsehood is bitter to the soul.”

The six points:

அதென்ன 4டி?

 புகைப்படத்தில் இருக்கும் உருவங்கள் நகரும் என்பதை நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் சாத்தியமில்லாத விஷயமாக கருதிக் கொண்டிருந்தார்கள். அசையும் படங்களுக்கான ஃபிலிம் புரொஜெக்டரை கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள் சிறு சிறு படங்களை உருவாக்கி மக்களுக்கு திரையிட்டுக் காட்டினார்கள். அப்போது இந்த சமாச்சாரத்துக்கு சினிமா என்று பெயர் வைக்கப்படவில்லை. Actualities (உண்மை நிகழ்வுகள்) என்று பெயர்.

The arrival of a train at Station என்கிற 46 நொடிகள் நீளமுள்ள திரைப்படத்தை (?), 1895ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக லூமியர் சகோக்கள் திரையிட்டபோது, பெரும் அமளி துமளி ஏற்பட்டது. திடீரென்று திரையில் தோன்றிய ரயில் பார்வையாளர்கள் மத்தியில் புகுந்து பெரும்

வீடு குடி புகுதல் சடங்குகள் உண்டா?





வீடு குடி போவதற்கென்று எந்த சடங்கும் இஸ்லாத்தில் இல்லை. வீட்டை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி "இறைவனின் பெயரால்.." உள்ளே நுழைய வேண்டியதுதான்.

வீடு கட்டி குடி போவதென்பது ஒரு மன நிறைவான மகிழ்சிகரமான காரியமாகும். இப்படி ஒரு மன நிறைவையும் மகிழ்சியையும் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எப்படியும் ஏதாவது சடங்கு செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அந்த சடங்குகளின் வரிசையை தான் பாத்திஹா ஓதுவது பால் காய்ச்சுவது என்று தொடர்கின்றது


நம் பெண்கள் பால் காய்ச்சுவதற்கு ஒரு தத்துவம் வேறு சொல்வார்கள். புது வீட்டில் பால் காய்ச்சி குடி புகுந்தால் பால் பொங்குவது போன்று

Tuesday, 19 July 2011

நெஞ்சம் மறப்பதில்லை - திரையிட்டு மறைக்கப்படும் தியாகங்களை!

 Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)


[ கோவையிலே 1998ஆம் ஆண்டு ஒரு போலீஸ் ஏட்டு வாய்த்தகராறில் கொலை செய்யப்பட்டு அதன் பின்பு 19 முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டு காவி மதவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களை அப்போது இருந்த ஆளும் கட்சியின் கைலி கட்டாத முஸ்லிம் என அடிக்கடி சொல்லும் பெரியவர் இந்து தீவிரவாதிகள் என சொல்லவில்லை.. மாறாக அங்கே குண்டுகள் வெடித்தபோது அதனைச் செய்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்றார்.


அதே போன்று தான்

Thursday, 14 July 2011

ஈழ முஸ்லிம்களை அடக்கி வாழ நினைக்கும் இலங்கைத் தமிழர்கள்!

                                     இலங்கைத் தீவில் வாழும் மக்களுள் முஸ்லீம் மக்களும் தமக்கென்றோர் தனியான, நீண்ட பாரம்பரிய வரலாற்றினைக் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.  இலங்கைத் தீவில்(ஈழத்தில்)  முதன் முதலாக வியாபார நோக்கோடு கி.பி 414ம் ஆண்டு தென் அரேபிய வர்த்தகர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களது வருகையானது வியாபார நோக்கோடு இருந்தது.  இதன் பின்னர், கி.பி 628ம் ஆண்டளவில் 'வஹாப் இப்னு அபீ ஹப்ஸா' எனும் நபிகளின் தோழர் இலங்கைக்கு வருகை தந்து, ’’இலங்கையர்களை இஸ்லாமியர்களாகவும், இலங்கை மன்னனாக அக் காலத்திலிருந்தவனை இஸ்லாமிற்கு மதம் மாறும் படியும் கோரியிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.


                     இக் காலப் பகுதியின் பின்னர் இலங்கையில் இஸ்லாமியர்கள் குடியேறியிருந்தாலும், ஈழத்தில் முஸ்லிம்கள்

Wednesday, 13 July 2011

நீளும் வாளை விட சாடும் ‘நா’ கொடியது

- உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்.
                         
                ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள இந்த அறிவிப்பைக் கவனமாக வாசியுங்கள். இதனை உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

                       அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களை ஒரு படையுடன் ‘ஜுஹைனா’ குலத்தாரைச் சேர்ந்த ‘ஹுரைக்கத்’ கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். (நாங்கள் அவர்களுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தோம்) அவர்களில் ஒருவனை நான் தாக்க முயன்ற போது அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறினார். எனினும் நான் அவரைத் தாக்கிக் கொன்றுவிட்டேன். அது என் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது. நான் இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறியபோது,

Monday, 11 July 2011

Islam-The Religion of Ease-”The Ease Granted To Those Who Pray”

              Five times prayer in a day is a duty Muslims are obliged to perform at certain times, which Allah has determined, throughout their lives without neglecting it. Those who do not carry out their religious duties, usually defer prayer till their old age. Yet, prayer is extremely easy to perform, as with all the other acts of worship.

              It should be noted that whatever Allah has decreed as obligatory it is the responsibility of each individual to carry it out as his obligation to Allah. In return for this, he may hope for Allah’s approval, mercy, and Heaven. Allah’s making the obligatory forms of worship easy is an indicator of His mercy and compassion.

             Those who do not, in spite of this, abide by Allah’s commands will not be able to say they didn’t have enough strength, or that it was hard for them to pray, as an excuse. (Except those mentioned by Allah in the Qur’an as not having any responsibilities).

             For example, to perform ablutions has been made very straightforward. In fact, in case a person cannot find any water to wash himself with, Allah has given tayammum — the substitution of sand, stone, or snow for water—as an alternative, and tayammum can be easily done in any type of situation.

For those who cannot find water, Allah informs us in one of His verses how to perform tayammum:

       … If you are in a state of major impurity, then purify yourselves. But if you are ill or on a journey, or have come from the lavatory, or have touched women, and cannot find any water, then do tayammum with pure sand, and wipe your faces and your hands with it. Allah does not want to make things difficult for you, but He does want to purify you and to perfect His blessing upon you so that hopefully you will be thankful. (Surat al-Ma’ida: 6)



              As Allah tells us in His verse, He does not want to make things demanding for people. Allah has simplified all the things stated in the Qur’an.

             The acts of worship Allah has commanded are extremely easy for those who have faith. Allah, in His mercy and compassion, has commanded the easiest and most wonderful forms of worship and lifestyle and has given the good news of His approval, mercy and Heaven to those who abide by these.

Shortening Prayer In Times Of War
             In the Qur’an, forms of respite have been laid down for certain periods. For example, at the time of the Prophet Muhammad (saas), when believers were in dire conflict with the deniers, Allah was lenient towards the believers in the carrying out of their worship at that time. It has been laid down that, in times of war believers may shorten their prayers when it is imperative:

             When you are travelling in the land, there is nothing wrong in your shortening your prayer if you fear that those who do not believe may harass you. The unbelievers are your inveterate cut enemies. (Surat an-Nisa’: 101)

            As can be understood from this verse, every one of Allah’s decrees and commands is full of benefits and wisdom for each and every one of the believers. Allah does not want hardship for His subjects. Allah is the believers’ real friend and sole protector.

source : xenia

Thursday, 7 July 2011

'ஜமாஅத் தொழுகை, தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்'

ஜமாஅத் தொழுகை
"ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், "இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!'' என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)
"எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள்.
இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்:

"எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.'' பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
உபை இப்னு கஅப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்:

அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், "நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!'' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: "நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்'' என்றார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் அவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)
உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்:

"இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

"ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

source : nidur.info

Tuesday, 5 July 2011

கடமையான குளிப்பும், நிறைவேற்றும் முறையும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி


“நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6)
குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:


விந்து வெளிப்படல்:

“இச்சை நீர்வெளிப்பட்டால் வுழூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114, இப்னுமாஜா-504, அபூதாவூத்-206)
இச்சை நீருக்கும் விந்துக்கும் வித்தியாசம் உண்டு. விந்து (மனீ) கடினமான வெள்ளை நிற திரவப் பொருளாகும். இச்சை நீர் (மதீ, வதீ) வெள்ளை நிறமான கடினமில்லாத சாதாரண திரவப் பொருளாகும். இது சிறுநீர் கழிக்குபோது அல்லது இலேசான உணர்வின்போது வெளியாகும்.
அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்படமாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப் பவர்: உம்மு ஸுலைம் (ரழி), ஆதாரம்: புகாரி-273, முஸ்லிம்-313, அபூதாவூத்-237)

உடலுறவு கொள்ளல்: 

உடலுறவு கொள்ளும்போது விந்து வெளிப்பட்டால்தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமாக இருந்தது. பின்பு இச்சட்டம் மாற்றப்பட்டு (ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்தால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பு அவசியமாக்கப்பட்டு) விட்டது. (ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-209, திர்மிதி-108,111, முஅத்தா-76)
ஒருவர் தனது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, பின்பு (உறவுகொள்ள) முயற்சித்தால் குளிப்பு கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-610, நஸாயி-191)

மாதவிடாய் ஏற்படல்:

நபியே! மாதவிடாய்ப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும் அது (அசுத்தமான) ஓர் உபாதை. எனவே மாத விடாய் காலத்தில் (உடலுறவு கொள்ளாமல்) பெண்களை விட்டு விலகி இருங்கள். அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை (உடலுறவு கொள்ள) நெருங்காதீர்கள். மாதவிடாயிலிருந்து (குளித்து) அவர்கள் சுத்தமாகி விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)
மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டு விடு. அது நின்றதும் குளித்து விட்டுத் தொழு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி-310, இப்னுமாஜா-621, நஸாயி-202)
மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளை திருப்பி (களா) தொழ வேண்டியதில்லை. (புகாரி-310) ஆனால் விடுபட்ட பர்ளான ரமழான் மாத நோன்பை திருப்பி நோற்க வேண்டும்.

தொடர் உதிரப்போக்கு:

மாதவிடாய் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஏற்படும். அந்த நாட்களை கடந்த பின், தொடர்ந்தும் இரத்தம் வெளியேறுவதைத் தான் தொடர் உதிரப்போக்கு எனக் கூறப்படும். இத்தொடர் உதிரப்போக்குள்ளவர்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்களைக் கணக்கிட்டு விட்டு குளித்து சுத்தமாகித் தொழ வேண்டும்.

source : ISLAMKALVI

Thursday, 30 June 2011

சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் !

           இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,20,000 பேர்  சாலை விபத்துக்களில் பலியாகின்றனர் .இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு அணு குண்டு இந்தியாவில் வீசப்பட்டால் பலியாவோரின் எண்ணிக்கைக்கு சமம் .உலக அளவில் முதலிடம் .இதற்கு காரணங்கள் என்ன இதற்க்கு தீர்வு  என்ன என்பது குறித்த ஓர் அலசல்.


1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக அதிகரித்து வருகிறது .குறிப்பாக சிறிய ரக கார்கள் இரு சக்கர வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது .வாகன நெரிசல் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :பேருந்து வசதிகள் அனைத்து ஊர்களுக்கும் தேவையான அளவில் தேவையான நேரத்தில் செய்யப்படவேண்டும் .

2 .வேகம்
பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடை பிடிப்பதில்லை.வேகமாக ஒட்டுவதால் அவர்களுக்கும் அதை விட அதிகமாக பிறருக்கும்  பிரச்சினைகள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :அளவுக்கதிகமாக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு தேவை .


3 .ஓட்டுனர் உரிமம்

வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .அடிப்படையான சாலை விதிகள்கூட பலருக்கு தெரிவதில்லை .

நிவாரணம் : தகுதியில்லாதவர்களுக்கு  ஓட்டுனர் உரிமம் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .


4 . தூக்கம்

அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 5  மணிக்குள் .இதற்கு காரணம் போதிய ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்.


நிவாரணம் :ஓட்டுனர்கள் தேவையான அளவு தூங்கி ஓய்வெடுக்கவேண்டும் .நீங்கள் ஓய்வெடுக்காவிட்டால் பலர் நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டியது வரும் .நீண்ட தூர பிரயாணங்களுக்கு கண்டிப்பாக இரு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் .


5 .குடி போதை

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன .

நிவாரணம் : பல சாலை விபத்து வழக்குகளில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய விஷயம்  சேர்க்கப்படுவதில்லை என்பது பலரது புகாராக உள்ளது .குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் .நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளை அகற்றவேண்டும் .



6 . தரமற்ற வாகனங்கள்
 
காலாவதியான வாகனங்களை ஓட்டுவதால் ஓட்டுனர் திறமையானவராக இருந்தாலும் விபத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது .
 
நிவாரணம் : தகுதியில்லாத வாகனங்களின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்யவேண்டும் .காலாவதியான அரசுப்பெருந்துகளை இயக்குவதை தவிர்க்கவேண்டும்


7 .பழுதடைந்த சாலைகள்
 
குண்டும்  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன .
 
நிவாரணம் :பழுதடையும் சாலைகளை உடனடியாக துறை சார்ந்தவர்கள் சரி செய்ய வேண்டும் .

8 .பொதுமக்கள் அலட்சியம்   

சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடப்பது வளர்ப்புப் பிராணிகளை சாலையில் நடமாட விடுவதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது .

 
நிவாரணம் :பொதுமக்கள் விழிப்புணர்வு


9 .சாலைகள் வடிவமைப்பு
 
புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும் சில விபத்துக்கள் நேரிடுகின்றன .
 
நிவாரணம் :தேர்ந்தவர்களை கொண்டு சாலைகளை வடிவமைக்கவேண்டும்.

10 . ஆக்கிரமிப்பு   சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.பொதுமக்கள் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன .
 
நிவாரணம் : ஆக்கிரமிப்புகளை பார பட்சமின்றி அகற்றவேண்டும் .

thanks : bala

Wednesday, 29 June 2011

சில நேரங்களில் பெண்கள் எரிந்து விழுவது ஏன்?



               சில நாட்களில் அவ்வளவு திருப்தியாக நாம் உணர்வதில்லை.மனசு ஒரு மாதிரியாக இருக்கிறது.ஆனால் சொல்லத்தெரிவதில்லை.எதிலும் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.வெற்றியென்றால் சந்தோஷப்படுவதும்,தோல்வி என்றால் சங்கடமாவதும் இயல்பாக உள்ள ஒன்று.ஆனால் காரணமே இல்லாமல் மனநிலையில் மாறுபாடு ஏற்பட்டுவிடுகிறது.

              இது ஆண்களுக்கும்,பெண்களுக்கும் பொதுவாக இருக்கும் விஷயம்தான்.ஆண்களைப்பற்றி

Tuesday, 21 June 2011

Marriage meeting and questions you can ask!!!

Marriage Meeting

It is permitted, rather recommended, to look at a prospective fiancé before marriage provided one is seriously contemplating marriage. This is allowed even if one fears sexual desire (shahwa), given the seriousness of the situation. The Fiqh rulings regarding this were explained in detail in an earlier answer titled “Looking at a Suitor and Showing Hair” which can be found by searching through the archives on this website.

Sayyiduna Jabir (may Allah be pleased with him) relates that